Wednesday, October 17, 2007

அடிப்பதில் தவறில்லை - இயக்குநர் சாமி

தமிழ் சினிமாவில் நடிகைகளை இயக்குநர்கள் அடிப்பது என்பது புதிதான விஷயமல்ல. முன்பு பாரதிராஜா, பாலச்சந்தர் போன்ற பெரிய இயக்குநர்கள் கூட ஹீரோயின்களை அடித்ததாக வரலாறு உள்ளது.

தாங்கள் விரும்பும் வகையில் காட்சி வர வேண்டும் என்ற ஆதங்கத்தில் நடிகைகள் அடிபட்டிருக்கிறார்கள். முன்னணி நடிகைகள் கூட இதற்கு விதிவிலக்காக இருந்ததில்லை. புதுமைப் பெண் படத்தில் ஒரு காட்சியில் சரியாக அழவில்லை என்பதற்காக ரேவதியை அடித்து நடிக்க வைத்தார் பாரதிராஜா என்பது அந்தக் காலத்து செய்தி.

அதேபோல பாக்யராஜ், பாண்டியன், ரத்தி அக்னிஹோத்ரி, ராதிகா போன்றோரும் பாரதிராஜாவிடம் அடி வாங்கியுள்ளனர்.

இயக்குநர் கே.பாலச்சந்தர், சரியாக நடிக்காவிட்டால் நடிகர்களை துண்டால் அடிப்பார் என்று கூறப்படுவதுண்டு.

ஆனால் அதையெல்லாம் அந்தக் கலைஞர்கள் பெரிதுபடுத்தியதில்லை. மாறாக மோதிரக் கையால் குட்டுப்பட்டோம் என்று பெருமையாகத்தான் கூறியுள்ளனர். மேலும், குருவின் கையால் ஆசிர்வாதம் வாங்கியதாகத்தான் அவர்கள் கூறியுள்ளனர். ஆனால் இன்றோ?

-இயக்குநர் சாமி

அதுசரி,
நல்லா படம் எடுக்காத இயக்குநர்களை என்ன செய்யலாம்?

Labels:

posted by பசிலன் @ 8:25 AM,


0 Comments: