Tuesday, November 06, 2007

நான்தான் உண்மையனத் தமிழச்சி

1. கர்நாடகாவில் பிறந்தாலும் நான் தமிழ்(?) குடும்பத்தில் பிறந்தவள். எனது உடம்பிலும் தமிழ் ரத்தம்(??) தான் ஓடுகிறது.

2. நான் கர்நாடகாவில் பிறந்ததை வைத்து இவ்வாறு சொல்கிறார்கள். நான் அங்கு பிறந்தாலும் தமிழ் குடும்பத்தில் தான் பிறந்தேன். தமிழ் ரத்தம் தான் எனது உடலில் ஓடுகிறது. எனது தாய்மொழி தமிழ் தான். (அப்ப, தந்தை மொழி?)

3. இலங்கையில் பிறந்தவர்களை தமிழர்கள் என்று ஏற்றுக்கொள்ளும் போது இந்தியாவின் ஒரு பகுதியாக உள்ள கர்நாடகாவில் பிறந்த என்னையும் தமிழர் என்று ஏற்றுக் கொள்ள வேண்டும்.(பாவம் எத்துகங்கப்பா)

4. கர்நாடகாவில் பிறந்ததால் கன்னடியர் ஆவது கிடையாது. தமிழ்நாட்டில் பஞ்சாபி குடும்பங்கள், ராஜஸ்தானைச் சேர்ந்த மார்வாடி குடும்பங்கள் மூன்று தலைமுறையாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை தமிழர்கள் என்று சொல்வதில்லை.

5. இதே போல், இலங்கையில் பிறக்கின்ற தமிழர்கள் சிங்களர்கள் என்ற சொல்வதில்லை. இலங்கைத் தமிழர்கள் என்று தான் சொல்கிறோம். நான் கர்நாடகாவில் பிறந்திருந்தாலும், தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்த சுத்த தமிழச்சி(?).

6. இலங்கை தமிழர்கள் மீது எனக்கும், அதிமுகவுக்கும் எப்போது பரிவும், பாசமும் உண்டு. இலங்கைத் தமிழர்கள் நல் அமைதியுடன் வாழ வேண்டும் என்பதே எனது விருப்பமும், எல்லோருடைய விருப்பமும் ஆகும்.(அப்படிப் போடு அருவாள)

7. கருணாநிதி, கடந்த 2 வருட காலமாக இலங்கைத் தமிழர்கள் கொடுமைகளை அனுபவித்துக் கொண்டிருந்த போதும், பலர் மரணமடைந்த போதும் வருத்தம் தெரிவிக்காமல் விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் மறைவிற்கு மட்டும் கவிதை வடிவில் இரங்கல் தெரிவித்து இருக்கிறார்.

8. மத்திய அரசு இதுவரை கண்டு கொள்ளாமல் இருப்பதால், இந்த விஷயம் குறித்து உச்ச நீதிமன்றத்தை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அணுகுவதை தவிர வேறு வழியில்லை என்பதைத் தெரிவித்து கொள்கிறேன்.(அப்ப வர்ற ஞாயிறு கோர்ட் உண்டு)

- திருவாட்டி ஜெ. ஜெயலலிதா.


இப்பத் தெரியுதா யாரு உண்மையானத் தமிழச்சின்னு

Labels:

posted by பசிலன் @ 8:29 AM,


1 Comments:

At November 12, 2007 at 12:00 AM, Blogger குசும்பன் said...

"அப்ப வர்ற ஞாயிறு கோர்ட் உண்டு"

ஹி ஹி இப்படி எல்லாம் உண்மைய பப்ளிக்கா சொல்லபிடாது:)))))))))))