Friday, November 16, 2007

போயஸ் தோட்டத்திற்கு இடமாறும் மனநல மருத்துவமனை - ஒரு அதிர்ச்சித் தகவல்

அதிகரித்துவிட்ட மன அழுத்தம் மற்றும் மனப்பிழர்வுகளால் பதிக்கப்பட்டவர்களால் அயானவரத்தில் ஏற்படும் கூட்ட நெரிசலைத தவிர்க்க போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலையத்தில்(ஏன்னா.. சாத்தான் அங்கிருந்துதான் அப்பப்ப வேதம் ஓதும்) ஒரு கிளை அமைப்பைத் தொடங்கவிருப்பதாக சற்றுமுன் வந்த தகவல் ஒன்று உறுதி செய்கிறது.

கடந்த சில ஆண்டுகளாகவே அங்கு செல்லும் நபர்களின் (சீச்சி.. அண்ணன பாத்தா அப்படித் தெரியலப்பா...) அதிகரிப்பால் அரசு இந்த முடிவை எடுத்திருப்பதாக உறுதிபடுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்பாராவிதமாக அவ்வழியே செல்லும் அன்பர்கள் எச்சரிக்கையாக இருக்கவும்.

மேலும் செய்திகளுக்கு...

உள்ள மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் எல்லாம் என்னுடைய இல்லத்தை நோக்கியே வந்து கொண்டிருக்கிறார்கள்.

posted by பசிலன் @ 4:14 AM, ,


Tuesday, November 06, 2007

நான்தான் உண்மையனத் தமிழச்சி

1. கர்நாடகாவில் பிறந்தாலும் நான் தமிழ்(?) குடும்பத்தில் பிறந்தவள். எனது உடம்பிலும் தமிழ் ரத்தம்(??) தான் ஓடுகிறது.

2. நான் கர்நாடகாவில் பிறந்ததை வைத்து இவ்வாறு சொல்கிறார்கள். நான் அங்கு பிறந்தாலும் தமிழ் குடும்பத்தில் தான் பிறந்தேன். தமிழ் ரத்தம் தான் எனது உடலில் ஓடுகிறது. எனது தாய்மொழி தமிழ் தான். (அப்ப, தந்தை மொழி?)

3. இலங்கையில் பிறந்தவர்களை தமிழர்கள் என்று ஏற்றுக்கொள்ளும் போது இந்தியாவின் ஒரு பகுதியாக உள்ள கர்நாடகாவில் பிறந்த என்னையும் தமிழர் என்று ஏற்றுக் கொள்ள வேண்டும்.(பாவம் எத்துகங்கப்பா)

4. கர்நாடகாவில் பிறந்ததால் கன்னடியர் ஆவது கிடையாது. தமிழ்நாட்டில் பஞ்சாபி குடும்பங்கள், ராஜஸ்தானைச் சேர்ந்த மார்வாடி குடும்பங்கள் மூன்று தலைமுறையாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை தமிழர்கள் என்று சொல்வதில்லை.

5. இதே போல், இலங்கையில் பிறக்கின்ற தமிழர்கள் சிங்களர்கள் என்ற சொல்வதில்லை. இலங்கைத் தமிழர்கள் என்று தான் சொல்கிறோம். நான் கர்நாடகாவில் பிறந்திருந்தாலும், தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்த சுத்த தமிழச்சி(?).

6. இலங்கை தமிழர்கள் மீது எனக்கும், அதிமுகவுக்கும் எப்போது பரிவும், பாசமும் உண்டு. இலங்கைத் தமிழர்கள் நல் அமைதியுடன் வாழ வேண்டும் என்பதே எனது விருப்பமும், எல்லோருடைய விருப்பமும் ஆகும்.(அப்படிப் போடு அருவாள)

7. கருணாநிதி, கடந்த 2 வருட காலமாக இலங்கைத் தமிழர்கள் கொடுமைகளை அனுபவித்துக் கொண்டிருந்த போதும், பலர் மரணமடைந்த போதும் வருத்தம் தெரிவிக்காமல் விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் மறைவிற்கு மட்டும் கவிதை வடிவில் இரங்கல் தெரிவித்து இருக்கிறார்.

8. மத்திய அரசு இதுவரை கண்டு கொள்ளாமல் இருப்பதால், இந்த விஷயம் குறித்து உச்ச நீதிமன்றத்தை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அணுகுவதை தவிர வேறு வழியில்லை என்பதைத் தெரிவித்து கொள்கிறேன்.(அப்ப வர்ற ஞாயிறு கோர்ட் உண்டு)

- திருவாட்டி ஜெ. ஜெயலலிதா.


இப்பத் தெரியுதா யாரு உண்மையானத் தமிழச்சின்னு

Labels:

posted by பசிலன் @ 8:29 AM, ,


ஒரு தற்கொலையின் மொழியிலிருந்து....

அன்னைத் தமிழின் அடிமை விலங்கு ஓடிந்திட வேண்டும்
ஆண்டப் புலிக்கொடி மீண்டுமிங்கு ஆடிட வேண்டும்
இனவாத இலங்கையரசை மாற்றிட வேண்டும்
ஈழமே எனதுயிரென இறுதிவரை முழங்கிட வேண்டும்
உறுதியான தலைவனின் கரங்கள் அங்கே ஓங்கிட வேண்டும்
ஊரெல்லாம் புலிப்படையாய் மக்கள் மாறிட வேண்டும்
எட்டப்பன் கொட்டமடக்க எட்டுத்திக்கும் எம்மக்கள்
ஏனடத் தமிழா இன்னுமா உறங்கிக்கிடக்கிறாய்
ஐயமேன்பதை தமிழகராதி அறியுமோ
ஒன்றுபட்டால் ஒருகைப் பார்ப்போம்
ஓட விரட்டிடுவோம் எமது எதிரி மூச்சை நிறுத்திடுவோம்.

-எழுதியவரைத் தெரிந்தால் பின்னூட்டமிடுங்கள்...

Labels:

posted by பசிலன் @ 7:53 AM, ,


Wednesday, October 17, 2007

அடிப்பதில் தவறில்லை - இயக்குநர் சாமி

தமிழ் சினிமாவில் நடிகைகளை இயக்குநர்கள் அடிப்பது என்பது புதிதான விஷயமல்ல. முன்பு பாரதிராஜா, பாலச்சந்தர் போன்ற பெரிய இயக்குநர்கள் கூட ஹீரோயின்களை அடித்ததாக வரலாறு உள்ளது.

தாங்கள் விரும்பும் வகையில் காட்சி வர வேண்டும் என்ற ஆதங்கத்தில் நடிகைகள் அடிபட்டிருக்கிறார்கள். முன்னணி நடிகைகள் கூட இதற்கு விதிவிலக்காக இருந்ததில்லை. புதுமைப் பெண் படத்தில் ஒரு காட்சியில் சரியாக அழவில்லை என்பதற்காக ரேவதியை அடித்து நடிக்க வைத்தார் பாரதிராஜா என்பது அந்தக் காலத்து செய்தி.

அதேபோல பாக்யராஜ், பாண்டியன், ரத்தி அக்னிஹோத்ரி, ராதிகா போன்றோரும் பாரதிராஜாவிடம் அடி வாங்கியுள்ளனர்.

இயக்குநர் கே.பாலச்சந்தர், சரியாக நடிக்காவிட்டால் நடிகர்களை துண்டால் அடிப்பார் என்று கூறப்படுவதுண்டு.

ஆனால் அதையெல்லாம் அந்தக் கலைஞர்கள் பெரிதுபடுத்தியதில்லை. மாறாக மோதிரக் கையால் குட்டுப்பட்டோம் என்று பெருமையாகத்தான் கூறியுள்ளனர். மேலும், குருவின் கையால் ஆசிர்வாதம் வாங்கியதாகத்தான் அவர்கள் கூறியுள்ளனர். ஆனால் இன்றோ?

-இயக்குநர் சாமி

அதுசரி,
நல்லா படம் எடுக்காத இயக்குநர்களை என்ன செய்யலாம்?

Labels:

posted by பசிலன் @ 8:25 AM, ,


Tuesday, October 16, 2007

சண்டை போட காசுதரும் தமிழக அரசு...


வேர ஒன்னுமில்ல..

இன்னைக்கி சட்டமன்ற கூட்டத்தொடராம்...

Labels:

posted by பசிலன் @ 10:58 PM, ,